முத்தரப்பு டி20 தொடர்: இறுதிப்போட்டியில் வெல்லப் போவது யார்?
நமீபியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் விளையாடுகின்றன.
நமீபியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் விளையாடுகின்றன.
நமீபியாவில் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் தொடங்கிய முத்தரப்பு டி20 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நமீபியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இந்த தொடரில் நமீபியா வெளியேற்றப்பட்டது. நமீபியா கிரிக்கெட் திடலில் இன்று (செப்டம்பர் 6) நடைபெறும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் விளையாடுகின்றன.
இந்த முத்தரப்பு டி20 தொடரில் தென்னாப்பிரிக்க அணி விளையாடிய 4 போட்டிகளில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. ஜிம்பாப்வே அணி 4 போட்டிகளில் இரண்டு வெற்றிகளுடன் இரண்டாமிடம் பிடித்தது. இரண்டு அணிகளுமே கிட்டத்தட்ட சமபலத்துடன் உள்ளன.
Advertisement
Advertisement
இந்த இரண்டு அணிகளில் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
South Africa and Zimbabwe are playing in the final of the tri-nation T20 series currently taking place in Namibia.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.