FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஐசிசி டி20 தரவரிசை: டாப் 2 இடங்களைப் பிடித்த இந்திய வீரர்கள்!

ஆடவருக்கான ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள் குறித்து...

45 வினாடிகள் முன்பு
இந்திய தொடக்க வீரர்கள். - படம்: எக்ஸ் / பிசிசிஐ
பகிர்:

ஆடவருக்கான ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்கள் முதலிரண்டு இடத்தைப் பிடித்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.

இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை 2-0 என வென்றுள்ளது. கடைசி டி20 போட்டி இன்று இரவு இந்திய நேரப்படி 7.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.

டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 2024, 2026 டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. அடுத்தாக 2028 உலகக் கோப்பையையும் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் முதல் போட்டியில் அசத்திய அபிஷேக் சர்மா ஐசிசி தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். இஷான் கிஷன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

டாப் 10ல் மூன்று இந்தியர்கள் இடம்பிடித்துள்ளார்கள். ஜாஸ் பட்லர் திலக் வர்மாவை முந்தி ஏழாவது இடம் பிடித்துள்ளார். இலங்கைக்கு எதிராக பட்லர் சிறப்பாக விளையாடியது கவனிக்கத்தக்கது.

ஐசிசி டி20 பேட்டர்களுக்கான தரவரிசை

1. இஷான் கிஷன் - 913 புள்ளிகள்

2. அபிஷேக் சர்மா - 862 புள்ளிகள்

3. சஹிஜதா ஃபர்ஹான் - 848 புள்ளிகள்

4. பில் சால்ட் - 799 புள்ளிகள்

5. டெவால்ட் பிரேவிஸ் - 789 புள்ளிகள்

summary

ICC T20 Rankings: Indian players secure the top two spots!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments