FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஷுப்மன் கில் இந்திய அணியின் கேப்டனாக நீண்ட காலம் தொடர்வார்; விராட் கோலி நம்பிக்கை!

இந்திய அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நீண்ட காலம் தொடர்வார் என மூத்த வீரர் விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

26 செப்டம்பர் 2026, 6:36 pm IST
விராட் கோலி - ஷுப்மன் கில்.
பகிர்:

இந்திய அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நீண்ட காலம் தொடர்வார் என மூத்த வீரர் விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை (செப்டம்பர் 27) தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், இந்திய அணியை ஷுப்மன் கில் கேப்டனாக சரியான பாதையில் வழிநடத்தி வருவதாகவும், அவர் கேப்டனாக நீண்ட காலம் தொடர்வார் எனவும் விராட் கோலி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

Advertisement

Advertisement

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் கேப்டனான ஷுப்மன் கில் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறார். கேப்டனாக அவரது அனுபவம் குறைவு. ஆனால், அணியை சரியான பாதையில் வழிநடத்தி செல்வதற்கான தீவிரம் அவரிடம் உள்ளது. அவரது திட்டங்களில் அவர் மிகவும் தெளிவாக இருக்கிறார். அவரது மேம்பாட்டில் கவனம் செலுத்தி இன்னும் அதிகமாக மேம்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், இந்திய அணியை சரியான திசையில் வழிநடத்த வேண்டும் என்ற அதீத ஆர்வம் அவரிடம் உள்ளது. அதனால், இந்திய அணியை அவர் நீண்ட காலம் கேப்டனாக வழிநடத்துவார் என நம்புகிறேன் என்றார்.

summary

Senior player Virat Kohli has expressed confidence that Shubman Gill will continue as the captain of the Indian team for a long time.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments