FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆசிய விளையாட்டு: காலிறுதியில் விளையாடாமலேயே அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி!

ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஆசிய விளையாட்டுக்காக ஜப்பான் சென்றடைந்துள்ள ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி - படம் | பிசிசிஐ
பகிர்:

ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகின்றன. அதில், கிரிக்கெட்டில் இன்று (செப்டம்பர் 28) நடைபெறவிருந்த காலிறுதிப் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொள்வதாக இருந்தது. ஆனால், மழை காரணமாக இந்தப் போட்டி டாஸ் சுண்டப்படாமலேயே கைவிடப்பட்டது.

இருப்பினும், ஐசிசி தரவரிசை அடிப்படையில் இந்திய அணி நேரடியாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. நேபாளம் - இலங்கை இடையேயான காலிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணியை இந்தியா அரையிறுதியில் சந்திக்கும்.

Advertisement

Advertisement

மழை காரணமாக நேபாளம் - இலங்கை இடையேயான காலிறுதிப் போட்டி கைவிடப்பட்டால், தவரிசை அடிப்படையில் இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேறும். அவ்வாறு நடக்கும் பட்சத்தில், இந்தியா - இலங்கை அணிகள் அரையிறுதியில் மோதிக்கொள்ளும்.

முன்னதாக, மழை காரணமாக பாகிஸ்தான் - ஹாங் காங் இடையிலான முதல் காலிறுதிப் போட்டியும் கைவிடப்பட்டது. தவரிசை அடிப்படையில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

கௌதம் கம்பீர் தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வரும் நிலையில், விவிஎஸ் லக்‌ஷ்மன் தலைமையிலான இந்திய அணி ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாடுவதற்காக ஜப்பானில் உள்ளது.

ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்ற நிலையில், ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வெல்லும் முனைப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

The Indian team has advanced to the semi-finals of the Asian Games cricket tournament.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments