ஐபிஎல்

அதிக சிக்ஸர்கள் அடித்த அணிகள்: ஆர்சிபிக்கு இணையாக ரசிகர்களை ஏமாற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ்!

குறைவாக சிக்ஸர்கள் அடித்த அணிகளில் கடைசி இரு இடங்களை சிஎஸ்கேவும் ஆர்சிபியும் பெற்றுள்ளன... 

எழில்

ஐபிஎல் போட்டி ஆரம்பித்துக் கிட்டத்தட்ட இரு வாரங்கள் ஆகிவிட்டன. இந்நிலையில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணிகளில் (சென்னை-மும்பை ஆட்டம் வரை) கொல்கத்தாவும் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களில் கொல்கத்தாவின் ரஸ்ஸலும் முதலிடம் பிடித்துள்ளார்கள்.

குறைவாக சிக்ஸர்கள் அடித்த அணிகளில் கடைசி இரு இடங்களை சிஎஸ்கேவும் ஆர்சிபியும் பெற்றுள்ளன. சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றதாக உள்ளதால் சிஎஸ்கே வீரர்களால் அதிக சிக்ஸர்கள் அடிக்கமுடியாத நிலை உள்ளது. அதேபோல பெங்களூர் அணி இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளதால் அந்த அணியாலும் அதிக சிக்ஸர்களை அடிக்கமுடியாமல் போய்விட்டது. இதுவரை மொத்தமாக 194 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. 

ஐபிஎல் 2019: அதிக சிக்ஸர்கள் அடித்த அணிகள்

37 கொல்கத்தா
27 சன்ரைசர்ஸ்
26 பஞ்சாப்
25 மும்பை
22 தில்லி
22 ராஜஸ்தான்
18 சென்னை
17 பெங்களூர்

அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்

15 ரஸ்ஸல் 
10 கெய்ல்
10 ரானா
10 வார்னர்
10 ரிஷப் பந்த்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT