முகப்பு

திருப்பரங்குன்றம் விவகாரம்: தவெக அரசு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆளுநரிடம் மனு அளித்த பாஜக

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் குறித்து ஆளுநரிடம் பாஜக மனு அளித்தது பற்றி...

திருப்பரங்குன்றம் விவகாரம்: தவெக அரசு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆளுநரிடம் மனு அளித்த பாஜக
ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரிடம் மனு அளித்த பாஜகவினர் - X | Nainar Nagenthran
பகிர்:

திருப்பரக்குன்றம் தீப விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாத தவெக அரசு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக ஆளுநரிடம் மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மனு அளித்துள்ளார்.

தவெக அரசு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆளுநரிடம் மனு அளித்தது குறித்து நயினார் நாகேந்திரன் கூறியதாவது, "நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத தவெக அரசின் செயல்பாடுகளையும், பொதுமக்கள் மீதான காவல்துறை அடக்குமுறையையும் கண்டித்து மேதகு ஆளுநரிடம் புகார் மனு

சென்னை மக்கள் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.வி.ஆர்லேகரை இன்று நேரில் சந்தித்து, திருப்பரங்குன்றம் திருக்கார்த்திகை தீபத் திருநாளின்போது, உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாமல் உதாசீனப்படுத்திய தமிழக அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து விரிவான புகார் மனுவை அளித்தோம்.

Advertisement

Advertisement

உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்கத் தவறியதோடு, இந்து மக்களின் மத உணர்வுகளையும் அடிப்படை உரிமைகளையும் புண்படுத்தும் வகையில் தமிழக அரசு செயல்பட்டதை ஆளுநரிடம் சுட்டிக்காட்டினோம்.

மேலும், தங்களது உரிமைகளுக்காகவும் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரியும் குரல் கொடுத்த பொதுமக்களைக் காவல்துறையினர் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியதற்கும், அவர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதிக்கும் வகையில் செயல்பட்டதற்கும் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தோம்.

இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் மத உரிமைகள் தொடர்பான பிரச்னைகள் குறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தினோம்.

நீதிமன்றத்தின் மாண்பைக் காப்பதும், மக்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாப்பதும் உறுதியான கடமை. இந்த விவகாரத்தில் நீதி கிடைக்கும்வரை ஜனநாயகப் போராட்டம் தொடரும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை தமிழ்நாடு அரசு நிறைவேற்றவில்லை என்றும், அரசமைப்புச் சட்ட கடமையை மாநில அரசு செய்யவில்லை என்றும் கூறி தவெக அரசு கலைக்கப்பட வேண்டும் எனக் கோரியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

summary

BJP Chief Nainar Nagendran has submitted a petition to the Governor, demanding action against the TVK government regarding the Thiruparankundram issue

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.