முகப்பு

தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்

திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றாதது குறித்து நயினார் நாகேந்திரன் பேட்டி...

14 வினாடிகள் முன்பு
தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்
முதல்வர் விஜய், நயினார் நாகேந்திரன் - கோப்புப்படம்
பகிர்:

தவெக அரசுக்கு கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டதாக தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் புதன்கிழமை தெரிவித்தார்.

உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை மகா தீபம் ஏற்றப்படவில்லை.

இதனிடையே, மதுரை நோக்கி வந்த பாஜக தலைவர்கள் நயினார் நாகேந்திரன், எல். முருகன், தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தீபம் ஏற்றப்படாதது குறித்து நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:

”தவெக அரசுக்கு கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது. நேற்று நடந்த விஷயம் ஹிந்துக்களுக்கு எதிரானது மட்டுமல்ல, இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கே எதிரானது. முதல்வர் விஜய்க்கு முதிர்ச்சி இல்லையென்று தோன்றுகிறது.

ஒரு முதல்வராக அனைவரையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கும் பக்குவம் அவருக்கு இல்லை. சில அரசியல் கட்சிகளின் சூழ்ச்சியில் மாட்டிக் கொண்டு முதல்வர் விஜய் வீணாகப் போகிறார் என்று நினைக்கிறேன்.

இந்திய அரசியலமைப்புக்கு எதிரான செயலுக்கு மாவட்ட ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் உச்ச நீதிமன்றத்துக்கு எதிராக செயல்பட்டதன் விளைவுகளை சட்ட ரீதியாக தமிழ்நாடு முதல்வர் சந்தித்தே தீருவார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

Countdown begins for the TVK government; Vijay will inevitably have to face the consequences! – Nainar Nagendran

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.