முகப்பு

மதுரை புறப்பட்ட நயினார் நாகேந்திரன் கைது!

நெல்லையில் இருந்து மதுரை புறப்பட்ட நயினார் நாகேந்திரனை காவல் துறை கைது செய்தது குறித்து...

மதுரை புறப்பட்ட நயினார் நாகேந்திரன் கைது!
கைது செய்யப்பட்ட நயினார் நாகேந்திரன் - DNS
பகிர்:

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை காவல் துறையினர் இன்று (நவ. 24) கைது செய்தனர்.

நெல்லையில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட நயினார் நாகேந்திரனை தாழையூத்து பகுதியில் தடுத்து நிறுத்தி காவல் துறையினர் கைது செய்தனர்.

மதுரை நகரம் மற்றும் திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதைக் காரணம் காட்டி மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் செல்ல காவல் துறையினர் அனுமதி மறுப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் செல்ல புறப்பட்ட என்னை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகைத் திருநாளான இன்று (நவ. 24) ஒரு நாள் மட்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள கல்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கும் வகையில் திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி நாளை (நவ. 25) மாலை 6 மணி வரை பக்தர்கள், மக்கள் செல்லத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று காலை நெல்லையில் உள்ள நயினார் நாகேந்திரனை காவல்துறையினர் திடீரென வீட்டுக் காவலில் வைத்தனர். இதனிடையே அவர் மதுரைக்கு புறப்பட்டபோது தாழையூத்து பகுதியில் அவரை தடுத்து நிறுத்தி காவல் துறையினர் கைது செய்தனர்.

summary

Nainar Nagendran who had set out for Madurai, has been arrested

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.