FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஐபிஎல்

‘நான் பதற்றமாக இருந்தேன்’ - ரன் சேஸிங் குறித்து மில்லர் கூறியது என்ன?

ஐபிஎல் போட்டியின் குவாலிஃபயா்-1 ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வென்று முதல் அணியாக ஃபைனல்ஸ்க்கு முன்னேறியுள்ளது. 

Updated On : 25 மே 2022, 11:55 am IST
டேவிட் மில்லர், ஹார்திக் பாண்டியா
பகிர்:

ஐபிஎல் போட்டியின் குவாலிஃபயா்-1 ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வென்று முதல் அணியாக ஃபைனல்ஸ்க்கு முன்னேறியுள்ளது. 

32 வயதான தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக நன்றாக விளையாடி வருகிறார். நேற்றையப் போட்டியில் (மே-24) 38 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து குஜராத் அணியின் வெற்றிக்குப் பங்களித்ததால் அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

“உண்மையில் எனக்கு சிறுது பதற்றமாகத்தான் இருந்தது. ஆனால் ஹார்திக், வழக்கமான கிரிக்கெட் ஷாட் மட்டும் அடிக்கவும் முடிந்தளவு ஆட்களில்லாத பகுதிகளில் அடிக்கவும் எனத் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தார். அவரால் ( ஹார்திக்) வேகமாக ஓட முடியவில்லை. எனக்கு ஓடுவது பிடித்திருந்தது. சேஷிங்கைப் பொறுத்தவரை ஹார்திக் பாண்டியா அமைதியான பொறுப்பான வீரராக திகழ்கிறார். என் மீது நம்பிக்கை வைத்து எனக்குத் தொடர்ந்து வாய்ப்பளித்து வரும் அணியின் நிர்வாகத்திற்கு எனது நன்றிகள். எனக்குக் கொடுக்கப்பட்ட ரோலில் நான் சிறப்பாக விளையாடி வருகிறேன். நிறைய வருடங்கள் விளையாடி வருவதால் ஆட்டத்தை நன்கு புரிந்து வைத்துள்ளேன்” என ரன் சேஸிங் குறித்து டேவிட் மில்லர் கூறினார். 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments