முகப்பு
ஐபிஎல்

ரோஹித்தைக் கட்டியணைத்த ஹார்திக் பாண்டியா!

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா முன்னாள் கேப்டன் ரோஹித்தை கட்டியணைக்கும் விடியோ வைரலாகியுள்ளது.

Updated On : 21 மார்ச் 2024, 12:24 pm IST
- படம்: மும்பை இந்தியன்ஸ் / எக்ஸ்
பகிர்:

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா முன்னாள் கேப்டன் ரோஹித்தை கட்டியணைக்கும் விடியோ வைரலாகியுள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக 5 கோப்பைகளை வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் கேப்டன் ரோஹித் சர்மா. 2013 முதல் 2023 வரை மும்பை அணிக்கு கேப்டனாக செயல்படுகிறார். கடைசி 2 சீசன்களாக சரியாக செயல்படாத காரணத்தினால் அவரது கேப்டன்சி குறித்து விமர்சனங்கள் எழுந்தன.

குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்த ஹார்திக் பாண்டியா ஒரு ஐபிஎல் கோப்பையை வென்றிருக்கிறார். இந்தாண்டு யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பாண்டியாவை மும்பை அணி வாங்கியது. பின்னர் பாண்டியாவை கேப்டனாக மாற்றியது.

Advertisement

Advertisement

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ஹார்திக் பாண்டியா, “ரசிகர்களாகிய உங்களின் உணர்வுகள் புரிகிறது. ஆனால், கேப்டனாக தேர்வு செய்தது அணி நிர்வாகம். என்னால் எதுவும் செய்ய முடியாது. ரோஹித்துடன் விளையாடுவது எனக்கு எந்த சங்கடமும் இல்லை. அவர் எனக்கு உதவுவார்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் ரோஹித் அணியில் கலந்து கொண்டத்தைத் தொடர்ந்து ஹார்திக் அவரைக் கட்டியணைத்து பேசினார். இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடியோவும் வைரலாகி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments