FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஐபிஎல்

சிஎஸ்கே போட்டிக்கான டிக்கெட் விலை குறைப்பு!

தோனி சிஎஸ்கேவின் கேப்டன் பொறுப்பினை ருதுராஜுக்கு மாற்றியப்பிறகு போட்டிக்கான டிக்கெட் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

Updated On : 22 மார்ச் 2024, 2:36 pm IST
பகிர்:

தோனி சிஎஸ்கேவின் கேப்டன் பொறுப்பினை ருதுராஜுக்கு மாற்றியப்பிறகு சிஎஸ்கே போட்டிக்கான டிக்கெட் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இன்று மாலை (மார்ச்.22) 8 மணிக்கு இந்த வருடத்தின் முதல் ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும் இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனைகள் ஆன்லைனில் தொடங்கியதுமே விற்றுத்தீந்தது. பலருக்கும் டிக்கெட் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டினை முன்வைத்தனர்.

பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வினும் தனக்கு டிக்கெட் கிடைக்கவில்லை எனக் கூறியிருந்தார்.

Advertisement

Advertisement

நேற்று மாலை (மார்ச்.21) தலைமைப் பொறுப்பிலிருந்து தோனி விலகினார். அவருக்குப் பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சிஎஸ்கே ரசிகர்கள் மனம் உடைந்து இணையத்தில் பதிவிட்டதைப் பார்க்க முடிந்தது.

இந்நிலையில் சிஎஸ்கேவின் அடுத்தப் போட்டிக்கான (குஜராத் டைட்டன்ஸ் உடனான) டிக்கெட் விற்பனைகள் தொடங்கியுள்ளன. இதில் முதல் போட்டிக்கு இருந்த விலையில் இருந்து மிகவும் குறைக்கப்பட்டுள்ளது.

அதாவது முதல் போட்டியில் ரூ,1700 லிருந்து ரூ.7500 வரைக்கும் இருந்தது. தற்போது 2வது போட்டிக்கு அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.6000ஆகக் குறைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments