FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஐபிஎல்

குற்றவுணர்ச்சியால் அதிக ரன்கள் குவித்தேன் : ஜாஸ் பட்லர்

ஆர்சிபி-க்கு எதிராக அதிக ரன்கள் குவித்தது குறித்து ஜாஸ் பட்லர் கூறியதாவது...

Updated On : 3 ஏப்ரல் 2025, 3:29 pm IST
ஜாஸ் பட்லர் - படம்: ஏபி
பகிர்:

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் கேட்ச் தவறவிட்ட காரணத்தினால் அதிக ரன்கள் குவித்ததாக குஜராத் டைட்டன்ஸ் வீரர் ஜாஸ் பட்லர் கூறியுள்ளார்.

ஆர்சிபிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 169 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது.

அடுத்து விளையாடிய குஜராத் அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து அபார வெற்றி பெற்றது.

Advertisement

Advertisement

இதில் பிலிப் சால்ட் கேட்ச்சை ஜாஸ் பட்லர் தவறவிடுவார். ஆனால், முகமது சிராஜ் அவரை க்ளீன் போல்ட் ஆக்கி வெளியேற்றுவார்.

73 ரன்கள் அடித்தது குறித்து 34 வயதாகும் பட்லர் பேசியதாவது:

குற்றவுணர்ச்சியால் அதிக ரன்கள் குவித்தேன்

எனக்குத் தெரியவில்லை, சிறிது அவமானமாக இருந்தது. ஏனெனில் பிலிப் சால்ட் அபாயகரமான வீரர் என நாம் அனைவருக்கும் தெரியும்.

நான் எளிமையாக பிடிக்க வேண்டிய பந்தினை எனது மார்பில் அடி வாங்கினேன். அந்தக் குற்ற உணர்ச்சியினால், அதிகமாக ரன்கள் அடிக்க வேண்டும் எனத் தோன்றியது.

ஒரு அணியாக நாங்கள் சரியாக ஃபீல்டிங் செய்யவில்லை. ஆனால், நன்றாக பேட்டிங் விளையாடினோம். என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

எளிமையான வெற்றி மட்டுமல்ல, இது எங்களுக்கு தகுதியான வெற்றி. ஆனால், நான் மிகவும் மகிழ்ச்சியாக விளையாடினேன். பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள்.

சமநிலையில் குஜராத் அணி

சில மாதங்களாக மகிழ்ச்சியுடன் கிரிக்கெட் விளையாட முடியவில்லை (சாம்பியன்ஸ் டிராபி தோல்வி, இந்தியா உடனான தோல்வி குறித்து பேசுகிறார்). அதனால், தற்போது சுதந்திரமாக நல்ல நோக்கத்துடன் விளையாட முயற்சிக்கிறேன்.

என்னால் என்ன சிறப்பாக செய்ய முடியுமோ அதையே குஜராத் அணிக்கு செய்ய முயல்கிறேன். இங்கிருப்பது ஆர்வமாக இருக்கிறது.

இந்த பிட்ச்சில் ஏதோ ஒன்று இருக்கிறது. எங்களது தொடக்க வீரர்கள் புத்திசாலிதனமாக விளையாடி அந்த குறைகளை நீக்கி பின்னர் வரும் பேட்டர்களுக்கு நல்ல அடித்தளத்தை அமைத்தார்கள்.

வேகப் பந்துவீச்சாளர்கள், சுழல் பந்துவீச்சாளர்கள், பேட்டிங் என அனைத்தும் எங்கள் அணியில் நன்றாக இருக்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments