FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

டெஸ்ட் தொடர்: அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள்!

அதிக ரன்கள் எடுத்தவர்களில் முதலிடம் தவனுக்கும் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர்களில்...

29 ஜனவரி 2024, 10:09 pm IST
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வி பெற்றுள்ளது. இந்திய அணி டெஸ்ட் தொடரை 3-0 என்கிற கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளது.

இலங்கையின் பல்லகெலேவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்தது இந்திய அணி. ஷிகர் தவன் 119, பாண்டியா 108, ராகுல் 85 ரன்கள் குவிக்க, 114.2 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் எடுத்தது இந்திய அணி. முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 37.4 ஓவர்களில் 135 ரன்களுக்குச் சுருண்டது. இதையடுத்து பாலோ-ஆன் பெற்று 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி  181 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இன்னிங்ஸ் மற்றும் 171 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி அடைந்துள்ளது.

இந்நிலையில் இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடி சதமெடுத்த ஹார்திக் பாண்டியா ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடரில் இரு சதங்கள் அடித்த தவன், தொடர் நாயகனாகத் தேர்வானார். 

Advertisement

Advertisement

இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: அதிக ரன்கள்

 பெயர்டெஸ்டுகள்ரன்கள்சராசரிஅதிக ரன்சதம்
1ஷிகர் தவன்335889.501902
2புஜாரா330977.251532
3கருணாரத்னே328547.501411
4ரஹானே322976.331321
5டிக்வெல்லா322737.83670

இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: அதிக விக்கெட்டுகள்

 பெயர்டெஸ்டுகள்விக்கெட்டுகள்சிறந்த பங்களிப்பு
1அஸ்வின்317
5/69
2ஜடேஜா313
5/152
3சமி310
3/32
4உமேஷ் யாதவ்362/21
5பிரதீப்26
6/132

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments