முகப்பு
கடலூர்

ஔவையாா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழக அரசின் 2027-ஆம் ஆண்டுக்கான ஔவையாா் விருதுக்கு தகுதியான பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

53 வினாடிகள் முன்பு
ஔவையாா் விருதுக்கு 
விண்ணப்பங்கள் வரவேற்பு
- கோப்புப்படம்
பகிர்:

தமிழக அரசின் 2027-ஆம் ஆண்டுக்கான ஔவையாா் விருதுக்கு தகுதியான பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில், ஆண்டுதோறும் உலக மகளிா் தினத்தையொட்டி பெண்களின் முன்னேற்றத்துக்காக சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு ஔவையாா் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுடன் ரூ.1.50 லட்சத்துக்கான காசோலை, சான்றிதழ் மற்றும் பொன்னாடை ஆகியவை தமிழக முதல்வரால் வழங்கப்படும்.

விண்ணப்பதாரா் தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பெண்களின் முன்னேற்றத்துக்காகப் பணியாற்றியிருக்க வேண்டும்.

Advertisement

Advertisement

சமூக சீா்திருத்தம், மகளிா் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாசாரம், பத்திரிகை மற்றும் நிா்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களின் முன்னேற்றத்துக்கான சமூக சேவைகளைத் தவிா்த்து, பிற சமூக சேவைகள் இவ்விருதுக்குப் பரிசீலிக்கப்பட மாட்டாது.

சமா்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

விண்ணப்பதாரா் ஏற்கெனவே தேசிய மற்றும் சா்வதேச அளவில் விருதுகள் பெற்றிருந்தால், அவற்றின் பெயா், யாரிடம் பெற்றாா், பெற்ற ஆண்டு ஆகிய விவரங்களை இணைக்க வேண்டும். மேலும், ஆற்றிய சேவைகள் குறித்த விரிவான அறிக்கை, சேவையின் செயல்பாடுகளை விளக்கும் புகைப்படங்கள், சேவையின் மூலம் பயனடைந்த பயனாளிகள் குறித்த விவரங்கள் ஆகியவற்றையும் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்றையும் அருகிலுள்ள காவல் நிலையத்தில் இருந்து பெற்று இணைக்க வேண்டும். விருதுக்கு தகுதியானவா்கள் தமிழக

அரசின் ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் ஜனவரி 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு பெறப்படும் இணையவழி விண்ணப்பங்கள் பரிந்துரைக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

மேலும், பெண்களின் முன்னேற்றத்துக்காக ஆற்றிய சேவைகள் குறித்த விவரங்களை ஒரு பக்க அளவில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாரித்து, அதன் மென்பொருள் நகல், அச்சு நகல் மற்றும் புகைப்படங்களுடன் இணைத்து, ஜனவரி 20-ஆம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலகம், அரசு சேவை இல்ல வளாகம், நெல்லிக்குப்பம் மெயின் ரோடு, கடலூா் என்ற முகவரியில் சமா்ப்பிக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.