FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அனைத்து ஐபிஎல் ஆட்டங்களையும் இந்தியாவிலேயே நடத்த நடவடிக்கை: பிசிசிஐ

ஐபிஎல் 2019 சீசன் அனைத்து ஆட்டங்களையும் இந்தியாவிலேயே நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிசிசிஐ தற்காலிக

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:


ஐபிஎல் 2019 சீசன் அனைத்து ஆட்டங்களையும் இந்தியாவிலேயே நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிசிசிஐ தற்காலிக செயலாளர் அமிதாப் செளதரி கூறியுள்ளார்.
ஐபிஎல் 2019 சீசனில் 8 அணிகள் சார்பில் ஆடவுள்ள வீரர்களுக்கான ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேலும் ஆட்ட அட்டவணையும் அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையே வரும் ஏப்ரல், மே மாதங்களில் பொதுத் தேர்தல் நடக்கவுள்ளது. 
மே மாதம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெறவுள்ளதால், ஐபிஎல் போட்டி மார்ச் தொடங்கி மே மாதம் மத்தியில் வரை நடைபெறலாம் எனத் தெரிகிறது.
இதுதொடர்பாக அமிதாப் செளதரி புதன்கிழமை கூறியதாவது: வரும் 2019 சீசனில் அனைத்து ஐபிஎல் ஆட்டங்களையும் இந்தியாவிலேயே நடத்த பிசிசிஐ நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கெனவே 2009 பொதுத் தேர்தலால் ஐபிஎல் ஆட்டங்கள் தென்னாப்பிரிக்காவுக்கு மற்றப்பட்டன. 2014 பொதுத் தேர்தலின் போது ஒரு பகுதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்றன என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments