மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் சைமோனா
மாட்ரிட் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
மாட்ரிட் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
முன்னதாக தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அவர் க் குடியரசின் கிறிஸ்டினா பிளிஸ்கோவாவை 6-1, 6-4 என்ற செட்களில் வீழ்த்தினார்.
இதேபோல் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான டென் மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 6-2, 6-2 என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் கிகி பெர்டன்ஸை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.
போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருக்கும் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-2, 6-3 என்ற செட்களில், போட்டித் தரவரிசையில் 9-ஆவது இடத்தில் இருந்த அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸை வீழ்த்தினார். ஸ்பெயினின் கார்பின் முகுருஸா 2-6, 6-4, 6-1 என்ற செட்களில் குரோஷியாவின் டோனா வெகிச்சை வென்றார்.
பிரான்ஸின் கரோலின் கார்சியா 6-2, 6-4 என்ற செட்களில் ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜஸை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.