FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இதற்கு மேலும் ஒலிம்பிக் போட்டியை ஒத்திவைக்க முடியாது: போட்டி அமைப்புக் குழு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை இன்னொரு வருடத்துக்கு மேலும் ஒத்திவைக்கமுடியாது என போட்டி அமைப்புக் குழு தரப்பு தெரிவித்துள்ளது.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை இன்னொரு வருடத்துக்கு மேலும் ஒத்திவைக்கமுடியாது என போட்டி அமைப்புக் குழு தரப்பு தெரிவித்துள்ளது.

விளையாட்டு உலகின் மிகப்பெரிய போட்டியாக கருதப்படுவது ஒலிம்பிக் போட்டி. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இப்போட்டி 2016-ல் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது.

அதன்பின் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கரோனா பாதிப்பால், போட்டிகளை ஒத்திவைக்க வேண்டும் என விளையாட்டு வீரா்கள் உள்பட பல்வேறு தரப்பினா் வலியுறுத்தினா். இதையடுத்து இந்த வருடம் நடக்கவிருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கரோனா வைரஸ் பரவலால் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி வரும் 2021 ஆம் ஆண்டு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரையும் பாராலிம்பிக் போட்டிகள் ஆக. 24 முதல் செப். 5 வரையும் நடைபெறும் என ஐஓசி, போட்டி அமைப்புக் குழு உள்ளிட்டவை அறிவித்துள்ளன.

இந்நிலையில் அடுத்த வருடப் போட்டி குறித்து போட்டி அமைப்புக் குழு தலைவர் யொஷிரோ மொரி கூறியதாவது: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை இன்னொரு வருடத்துக்கு மேலும் ஒத்திவைக்கமுடியாது. நிச்சயம் அடுத்த வருடம் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

போட்டி அமைப்புக் குழு செய்தித்தொடர்பாளர் மாசா டகாயா கூறியதாவது:

அடுத்த வருடம் போட்டியை நடத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். இதற்கு மேலும் மாற்றுத்திட்டம் கிடையாது என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments