FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன்: காலிறுதிச் சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Updated On : 14 பிப்ரவரி 2021, 10:05 pm IST
பகிர்:


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டத்தில் கனடாவின் மிலோஸ் ரோனிக்கை எதிர்கொண்டார் ஜோகோவிச். 2 மணி நேரம் 56 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 7-6, 4-6, 6-1, 6-4 என்கிற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார். இது கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஜோகோவிச்சின் 300-வது வெற்றியாகும்.

அதேசமயம், இதில் வெற்றி பெற்றதன்மூலம் ஜோகோவிச் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மெல்போர்ன் பார்கில் நடைபெறும் காலிறுதிச் சுற்றில் அவர் உலகின் 7-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரெவ்வை எதிர்கொள்கிறார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments