முகப்பு
செய்திகள்

ஐசிசி போட்டிகளை நடத்த இந்தியா உள்ளிட்ட 17 நாடுகள் ஆர்வம்

2023 முதல் 2031 வரையிலான ஐசிசி போட்டிகளை நடத்த இந்தியா உள்ளிட்ட 17 நாடுகள் ஆர்வம் காண்பித்துள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

Updated On : 5 ஜூலை, 2021 at 4:18 PM
பகிர்:

2023 முதல் 2031 வரையிலான ஐசிசி போட்டிகளை நடத்த இந்தியா உள்ளிட்ட 17 நாடுகள் ஆர்வம் காண்பித்துள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

2023-2031 காலகட்டத்திலான கிரிக்கெட் போட்டிகள் குறித்து விவாதிக்க ஐசிசி கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 2024 முதல் 2031 வரை ஆடவர், மகளிர் என இரு பிரிவிலும் 20 ஐசிசி போட்டிகள் நடைபெறவுள்ளன. ஆடவர் பிரிவில் எட்டு ஒருநாள் மற்றும் டி20 ஐசிசி போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் வெள்ளைப் பந்து ஐசிசி போட்டிகளை நடத்த இந்தியா உள்ளிட்ட 17 நாடுகள் ஆர்வம் காண்பித்துள்ளதாக ஐசிசி இன்று தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, மலேசியா, நமிபியா, நியூசிலாந்து, ஓமன், பாகிஸ்தான், ஸ்காட்லாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் ஐசிசி போட்டிகளை நடத்த ஆரம்பக்கட்ட விண்ணப்பங்களை அளித்துள்ளன. அடுத்தக்கட்டமாக கூடுதல் விவரங்களுடன் முழுமையான விண்ணப்பங்களை அனுப்புவார்கள். இதன்பிறகு ஐசிசி போட்டிகளை எங்கு நடத்துவது என்கிற முடிவு எடுக்கப்படும் என ஓர் அறிக்கையில் ஐசிசி கூறியுள்ளது.

Advertisement

2024-2031-ல் நடைபெறவுள்ள ஐசிசி போட்டிகள்

2024 -  ஆடவர், மகளிர் டி20 உலகக் கோப்பை
2025 - ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம், மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை
2026 - ஆடவர், மகளிர் டி20 உலகக் கோப்பை
2027 - ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம், மகளிர் டி20 சாம்பியன்ஸ் கோப்பை
2028 - ஆடவர், மகளிர் டி20 உலகக் கோப்பை
2029 - ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம், மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை
2030 - ஆடவர், மகளிர் டி20 உலகக் கோப்பை
2031 - ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம், மகளிர் டி20 சாம்பியன்ஸ் கோப்பை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.