செய்திகள்

அபுதாபி மாஸ்டர்ஸ் செஸ்: இந்திய வீரர் சாம்பியன்

அபுதாபி மாஸ்டர்ஸ் செஸ் போட்டியை இந்தியாவின் அர்ஜூன் அரிகைசி வென்றுள்ளார். 

DIN

அபுதாபி மாஸ்டர்ஸ் செஸ் போட்டியை இந்தியாவின் அர்ஜூன் அரிகைசி வென்றுள்ளார். 

அபுதாபி மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் கடைசி சுற்றில் ஸ்பெயின் கிராண்மாஸ்டர் டேவிட் ஆண்டனை எதிர்கொண்டார் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி. கடைசி சுற்றுக்கு முன்பு 3 இந்திய வீரர்கள் உள்பட 9 வீரர்கள் 6 புள்ளிகளைப் பெற்றிருந்தார்கள். இதனால் கடைசி சுற்றில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலைமையில் இருந்தார் அர்ஜுன். கடைசி சுற்றை வென்ற அர்ஜுன், 9 சுற்றுகளின் முடிவில் 7.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றார். இதன்மூலம் அபுதாபி மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் ஆகியுள்ளார். 

இந்த வெற்றியின் மூலம் செஸ் தரவரிசையில் 2724 புள்ளிகளுடன் 24-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் அர்ஜுன். இவருக்கு முன்பு விஸ்வநாதன் ஆனந்த் 2756 புள்ளிகளுடன் 12-ம் இடத்திலும் குகேஷ் 2728 புள்ளிகளுடன் 20-ம் இடத்திலும் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாவட்ட மைய நூலகத்தில் சிறுவா் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

மென் பொறியாளா் உயிரிழப்பு

தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு வின்ஸ் பள்ளி மாணவா் தோ்வு

பாகிஸ்தான் அமைச்சர் கையில் வெற்றிக் கோப்பையை வாங்க இந்தியா மறுப்பு! கையோடு எடுத்துச் சென்ற நிர்வாகம்!

கரூா் சம்பவம்: ஈரோட்டைச் சோ்ந்த கல்லூரி மாணவா் உள்பட 3 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT