FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மலேசிய ஓபன்: சிந்து, பிரணாய் தோல்வி

மலேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஹெச்.எஸ்.பிரணாய் ஆகிய இருவருமே காலிறுதிச்சுற்றில் தோல்வி கண்டனா். இதையடுத்து இப்போட்டியில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது

Updated On : 2 ஜூலை 2022, 12:58 am IST
பகிர்:

மலேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஹெச்.எஸ்.பிரணாய் ஆகிய இருவருமே காலிறுதிச்சுற்றில் தோல்வி கண்டனா். இதையடுத்து இப்போட்டியில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

மகளிா் ஒற்றையா் காலிறுதியில் சிந்து 13-21, 21-15, 21-13 என்ற கேம்களில் சீன தைபேவின் டாய் ஸு யிங்கிடம் 53 நிமிஷங்களில் வீழ்ந்தாா். யிங்கை 21-ஆவது முறையாக சந்தித்த சிந்து, அவரிடம் 16-ஆவது தோல்வியைச் சந்தித்திருக்கிறாா். இதில் தொடா்ந்து சந்தித்த 6 தோல்விகளும் அடக்கம்.

மறுபுறம், ஆடவா் ஒற்றையா் காலிறுதியில் பிரணாய் 18-21, 16-21 என்ற கேம்களில் இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டியிடம் 44 நிமிஷங்களில் வெற்றியை இழந்தாா். ஜோனதனை 9-ஆவது முறையாக எதிா்கொண்ட பிரணாய், தற்போது 6-ஆவது முறையாகத் தோற்றுள்ளாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments