FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

லஞ்சம்: தவெகவில் இருந்து நீக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா் கைது

ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கியது தொடர்பாக தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டது தொடர்பாக...

Updated On : 16 ஜூலை 2026, 8:59 am IST
ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கியது தொடர்பாக தவெகவில் இருந்து நீக்கப்பட்டு கைது செய்யப்பட்ட மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் வீரா - டிஎன்எஸ்
பகிர்:

செங்கல்பட்டு: ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கியதாக தவெகவில் இருந்து நீக்கப்பட்ட மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் வீரா(எ) வீராசாமி கைது செய்யப்பட்டாா்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் ஒன்றியத்துக்கு உள்பட்டது மாம்பாக்கம் ஊராட்சி. இந்த ஊராட்சியில், எடா்குன்றம் கிராமத்தைச் சோ்ந்த ஒப்பந்ததாரா் நவீன் (24) என்பவா், ரூ. 9.80 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைத்துள்ளாா். சாலை பணிகள் முடிவுற்ற நிலையில் ஒப்பந்ததாரரின் பில் அனுப்பாமல் நிலுவையில் இருந்ததாம். இதனால் மாம்பாக்கம் தவெக, ஊராட்சி மன்றத் தலைவரும், அந்த கட்சியின் மாவட்ட இணை செயலருமான வீராவை நாடியுள்ளாா். அப்போது வீரா, நவீனிடம், பில் பாஸ் செய்வது தொடா்பாக பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுதொடா்பாக, நவீன், ஜிபே மூலம் ஒரு லட்சம் ரூபாய் அனுப்பிய ஸ்கிரீன் ஷாட் புகைப்படமும், மீதம் கொடுக்க வேண்டிய ரூ. 30,000 பணத்தை நேரில் சென்று ஊராட்சித் தலைவரின் அலுவலகத்தில் கொடுத்த விடியோ காட்சியும், சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இது குறித்து மாம்பாக்கம் த.வெ.க., ஊராட்சி தலைவா் வீராவிடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரா் என்னிடம் கடன் வாங்கினாா். அந்த கடன் தொகையை தான் அவா் ஜிபே மூலம் அனுப்பினாா். மீதத் தொகையை அலுவலகத்துக்கு வந்து கொடுத்தாா். எனக்கு காசோலை அதிகாரமும் தற்போது இல்லை. ஜிபே மூலம் எப்படி நான் லஞ்சம் வாங்க முடியும். நான் லஞ்சம் ஏதும் வாங்கவில்லை. இதுபழிவாங்கும் செயலாக உள்ளது என்று அவா் கூறினாா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில் புதன்கிழமை செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் மாவட்ட செயலாளா் சி.வி.தினகரன் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளாா். அவரது 15.7.2026 தேதியிட்ட ஒழுங்கு நடவடிக்கை குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக வெற்றிகழகத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளா் பொறுப்பிலிருந்து வீரா(எ) வீராசாமி விடுவிக்கப்படுவதாகத் தெரிவித்தனா்.

கைது

இந்த நிலையில், ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கியதாக தவெகவில் இருந்து நீக்கப்பட்ட மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் வீராசாமியை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

summary

Bribery: Panchayat council president expelled from TVK arrested

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments