உலக தடகளம்: 100 மீட்டரில் ஜமைக்கா ஆதிக்கம்
அமெரிக்காவில் நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் 3 பதக்கங்களையுமே ஜமைக்க வீராங்கனைகள் வென்றனர்.
அமெரிக்காவில் நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் 3 பதக்கங்களையுமே ஜமைக்க வீராங்கனைகள் வென்றனர்.
அந்நாட்டின் ஷெல்லி ஆன் ஃப்ரேசர் பிரைஸ் 10.67 விநாடிகளில் இலக்கை எட்டி சாம்பியன்ஷிப் சாதனையுடன் தங்கம் வெல்ல, சக நாட்டவர்களான ஷெரிகா ஜாக்சன் 10.73 விநாடிகளில் (பெர்சனல் பெஸ்ட்) வந்து வெள்ளியும், எலெய்ன் தாம்சன் ஹெரா 10.81 விநாடிகளில் எட்டி வெண்கலமும்
பெற்றனர்.
முதலிடம் பிடித்த ஷெல்லிக்கு, உலக சாம்பியன்ஷிப்பில் இது 5-ஆவது தங்கமாகும்.
Advertisement
Advertisement
முன்னதாக அமெரிக்காவின் மரியன் ஜோன்ஸ் 1999-ஆம் ஆண்டு சாம்பியன்ஷிப்பில் 10.70 விநாடிகளில் இலக்கை எட்டியதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது ஷெல்லி அதை முறியடித்திருக்கிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.