FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆசியக் கோப்பை டி-20: 6வது முறையாக இலங்கை சாம்பியன்

ஆசியக் கோப்பை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையைத் தட்டிச்சென்றது.

1 பிப்ரவரி 2024, 3:48 pm IST
பகிர்:

ஆசியக் கோப்பை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையைத் தட்டிச்சென்றது.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதும் இறுதிப் போட்டி துபை சர்வதேச மைதானத்தில் இன்று (செப்.11) நடைபெற்றது. 

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, இலங்கை அணி முதலில் பேட் செய்தது.

Advertisement

Advertisement

தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசங்கா மற்றும் குஷால் மெண்டிஸ் தடுமாற்றமான ஆட்டத்தையே அளித்தனர். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய  தனஞ்ஜெயா டி சில்வா, கேப்டன் தாசுன் ஷானகா ஆகியோர் சொற்ப ரன்களிலேயே வெளியேறினர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த பனுகா ராஜபட்ச மற்றும் வனிந்து ஹசரங்கா இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்டனர். இந்த ஜோடி அதிரடி காட்ட அணியின் ரன் விகிதம் அதிகரித்தது. 

அதன்பின் ராஜபட்சவுடன் சமிகா கருணாரத்னே ஜோடி சேர்ந்து அதிரடி காட்டினார். சிறப்பான ஆட்டத்தை வழங்கிய பனுகா ராஜபட்ச 45 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். 

முடிவில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்களைக் குவித்தது.

இதனை அடுத்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் வலுவான ஆட்டத்தை வழங்கினாலும், இலங்கை அணியின் அபார பந்துவீச்சால் தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரரான ரிஸ்வான் 49 பந்துகளில் அரைசதம் கடந்து 55 ரன்கள் குவித்தார். 

அதனைத் தொடர்ந்து வந்த பாபர் அஸாம் (5), நவாஸ் (6), குஷ்தில் ஷா (2), ஆசிஃப் அலி (0) உள்ளிட்டோர் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். 

இதனால் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை இலங்கை வீழ்த்தியது.

இதன் மூலம் இலங்கை அணி 6வது முறையாக டி-20 ஆசியக் கோப்பையை வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments