முகப்பு
செய்திகள்

சமூகவலைத்தளங்களில் தி லெஜண்ட் நடிகை - ரிஷப் பந்த் மோதல்!

சமூகவலைத்தளங்களில் ஒருவர் மீது மற்றவர் குறை சொல்லி வருகிறார்கள். 

Updated On : 12 ஆகஸ்ட் 2022, 1:26 pm IST
பகிர்:

பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தும் பிரபல நடிகை ஊர்வசி ரெளடேலாவும் பெயர்களைக் குறிப்பிடாமல் சமூகவலைத்தளங்களில் ஒருவர் மீது மற்றவர் குறை சொல்லி வருகிறார்கள். 

பாலிவுட் நடிகை ஊர்வசி ரெளடேலா, 2013 முதல் பாலிவுட்டில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான லெஜண்ட் என்கிற தமிழ்ப் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். 

பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தும் தானும் காதலிப்பதாக நடிகை ஊர்வசி ரெளடேலா முன்பு சூசகமாகத் தெரிவித்திருந்தார். இதனை மறுத்த ரிஷப் பந்த், சமூகவலைத்தளங்களில் ஊர்வசியை பிளாக் செய்தார். எனினும் இருவருக்கும் இடையிலான மோதல் இன்னும் தொடர்ந்து வருகிறது. 

Advertisement

Advertisement

சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் ஊர்வசி ரெளடேலா கூறியதாவது: 

வாரணாசியில் எனக்குப் படப்பிடிப்பு இருந்தது. தில்லியில் ஒரு நிகழ்ச்சி இருந்தது. இரவு தான் தில்லிக்கு வந்தேன். தில்லியிலும் முழு நாளும் படப்பிடிப்பு இருந்தது. அப்போது என்னைப் பார்க்க வந்த ஆர்.பி. ஹோட்டலிலேயே காத்திருந்தார். அறைக்கு வந்து நான் தூங்கிவிட்டேன். எந்த போன் அழைப்பையும் நான் எடுக்கவில்லை. போனை எடுத்துப் பார்த்தால் 16 மிஸ்ட் கால்கள் இருந்தன. இது எனக்குக் கவலையை அளித்தது. என்னைப் பார்க்க ஒருவர் வந்து அவ்வளவு நேரம் காத்திருந்தும் என்னால் பார்க்க முடியவில்லை. நீங்கள் எப்போது மும்பை வருகிறீர்களோ அப்போது பார்க்கலாம் என அவரிடம் கூறினேன். நாங்கள் மும்பையில் சந்தித்தோம் என்றார். ஆர்பி யார் எனக் கேட்கப்பட்டதற்கு அதை நான் சொல்ல மாட்டேன் என்று கூறிவிட்டார். 

இதையடுத்து ரிஷப் பந்த் இன்ஸ்டகிராமில் ஒரு பதிவு எழுதி அதை நீக்கிவிட்டார். அந்தப் பதிவில் அவர் கூறியதாவது:

தலைப்புச் செய்திகளி இடம்பிடிப்பதற்காகவும் புகழுக்காகவும் மக்கள் பொய் சொல்வது வேடிக்கையாக உள்ளது. சிலர் புகழுக்காக ஏங்குவது வேதனையாக உள்ளது அவர்களைக் கடவுள் வாழ்த்தட்டும் என்று கூறி பிறகு அந்தப் பதிவை நீக்கிவிட்டார். 

இதற்குப் பிறகு இன்ஸ்டகிராமில் ஊர்வசியும் பதில் அளித்துள்ளார். சின்னத் தம்பி பேட் பந்தில் தான் விளையாட வேண்டும். உன்னைப் போன்ற சிறியவனால் நான் அவமானப்பட மாட்டேன் என்று கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments