FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இந்தியாவுக்கு எத்தனை ஆட்டங்கள்?: 2023-27 கிரிக்கெட் அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2023-27 ஆண்டுகளுக்கான ஆடவர் கிரிக்கெட் அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. 

Updated On : 17 ஆகஸ்ட் 2022, 4:32 pm IST
பகிர்:

2023-27 ஆண்டுகளுக்கான ஆடவர் கிரிக்கெட் அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. 

இந்த நான்கு ஆண்டுகளிலும் ஐசிசியில் முழு உறுப்பினர்களாக உள்ள 12 நாடுகளும் மொத்தமாக 777 சர்வதேச ஆட்டங்களை - 173 டெஸ்டுகள், 281 ஒருநாள், 323 டி20 ஆட்டங்களை விளையாடவுள்ளன. கடந்த 4 வருடங்களில் இந்த 12 நாடுகளும் 694 ஆட்டங்களில் விளையாடின.

இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் 1992-க்குப் பிறகு முதல்முறையாக 5 ஆட்டங்களைக் கொண்ட இரு டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளன. 2024-25-ல் இந்தியாவின் ஆஸ்திரேலியச்  சுற்றுப்பயணத்தில் இரு அணிகளும் 5 டெஸ்டுகளில் விளையாடவுள்ளன. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என இரு நாடுகளுக்கும் எதிராகவும் இந்தியா தலா 5 டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் இனி விளையாடும். 

Advertisement

Advertisement

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக இந்தியா விளையாடும் டெஸ்டுகள்

இந்தியாவில் 5 டெஸ்டுகள் vs இங்கிலாந்து - 2024 ஜனவரி 
ஆஸ்திரேலியாவில் 5 டெஸ்டுகள் vs ஆஸ்திரேலியா - 2024 நவம்பர் 
இங்கிலாந்தில் 5 டெஸ்டுகள் vs இங்கிலாந்து - 2025 ஜூன் 
இந்தியாவில் 5 டெஸ்டுகள் vs ஆஸ்திரேலியா - 2027 ஜனவரி 

ஐபிஎல், தி ஹண்ட்ரட், பிபிஎல் ஆகிய டி20 லீக் போட்டிகளுக்காக ஏப்ரல், மே, ஆகஸ்ட், ஜனவரி மாதங்களில் மிகக்குறைவான சர்வதேச ஆட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

2023-25 டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேச ஆகிய அணிகளுக்கு எதிராகவும் வெளிநாடுகளில் ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் அணி, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராகவும் விளையாடவுள்ளது.

2025-27 டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் அணி, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராகவும் வெளிநாடுகளில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராகவும் விளையாடவுள்ளது. 

இந்த நான்கு வருடங்களில் 5 வெள்ளைப் பந்து ஐசிசி போட்டிகள் நடைபெறவுள்ளன. 2023-ல் இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பை, 2024-ல் மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை, 2025-ல் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை, 2026-ல் இந்தியா, இலங்கையில் டி20 உலகக் கோப்பை, 2027-ல் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமிபியாவில் ஒருநாள் உலகக் கோப்பை என ரசிகர்களை மகிழ்விக்க முக்கியமான ஐசிசி போட்டிகள் ஒவ்வொரு வருடமும் நடைபெறவுள்ளன. 

2024-27 இந்தியா விளையாடும் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர்கள்

5 டி20 vs ஆஸ்திரேலியா 2023 நவம்பர் 
5 டி20 vs இங்கிலாந்து 2025 ஜனவரி 
5 டி20 vs ஆஸ்திரேலியா 2025 அக்டோபர் 
5 டி20 vs தெ.ஆ. 2025 நவம்பர்
5 டி20 vs நியூசிலாந்து 2026 ஜனவரி 
5 டி20 vs இங்கிலாந்து 2026 ஜூலை 
5 டி20 vs மே.இ. தீவுகள் 2026 செப்டம்பர் 
5 டி20 vs நியூசிலாந்து 2026 அக்டோபர் 

இந்த நான்கு ஆண்டுகளில் இந்திய அணி (ஐசிசி போட்டிகளைத் தவிர) 38 டெஸ்டுகள், 42 ஒருநாள், 61 டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments