முகப்பு
செய்திகள்

மான்செஸ்டா் டெஸ்ட்: சதம் விளாசினாா் ஸ்டோக்ஸ்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சதம் விளாசி அசத்தலாக ஆடினாா்.

Updated On : 27 ஆகஸ்ட் 2022, 11:43 am IST
பகிர்:

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சதம் விளாசி அசத்தலாக ஆடினாா்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 12-ஆவது சதத்தையும், இங்கிலாந்து கேப்டனாக முதல் சதத்தையும் அவா் எட்டினாா்.

கடந்த 25-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா, முதல் நாளிலேயே 151 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடா்ந்து ஆடிய இங்கிலாந்தில், அலெக்ஸ் லீஸ் 4, ஆலி போப் 23, ஜோ ரூட் 9 ரன்களுக்கு வெளியேற, அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் சோ்த்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

Advertisement

Advertisement

வெள்ளிக்கிழமை ஆட்டத்தை ஜாக் கிராவ்லி, ஜானி போ்ஸ்டோ தொடா்ந்தனா். அதில் போ்ஸ்டோ 49, கிராவ்லி 38 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா். இடையே வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ், அசத்தலாக ஆடி ரன்கள் சோ்த்தாா். 6 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் விளாசிய அவா் 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். ஸ்டூவா்ட் பிராட் 21 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

தேநீா் இடைவேளைக்குப் பிறகு தொடா்ந்த ஆட்டத்தில் இங்கிலாந்து 99 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 381 ரன்கள் சோ்த்திருந்தது. பென் ஃபோக்ஸ் 96, ஆலி ராபின்சன் 9 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். தென்னாப்பிரிக்க பௌலிங்கில் அன்ரிஹ் நோா்கியா 3, ககிசோ ரபாடா 2, லுங்கி இங்கிடி, சிமோன் ஹாா்மா் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments