3வது போட்டியில் இந்தியா பேட்டிங்: இஷான் அதிரடி தொடக்கம்!
இந்தியா - வங்கதேசம் மோதும் 3வது மற்றும் கடைசியான ஒருநாள் போட்டியில் இந்தியா அணி பேட்டிங்.
இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் சனிக்கிழமை காலை 11.30 மணிக்குத் தொடங்கியது.
3வது போட்டியில் வங்கதேசம் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணி கலமிறங்கியது. இஷான் கிஷன், குல்தீப் அணியில் இடம்பெற்றுள்ளனர். ரோஹித் காயம் காரணமாக இடம்பெறவில்லை. ஏற்கனவே வங்கதேசம் இந்த தொடரில் 2-0 என முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.
ஷிகர் தவான் 3 ரன்னில் ஆட்டமிழந்தாலும் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 50 ரன்களை கடந்துள்ளார். 15 ஓவர் முடிவில் இந்திய அணி 85 ரன்கள் 1 விக்கெட். இஷான் கிஷன் 54 ரன்கள், விராட் கோலி 16 ரன்களுடன் களத்தில் இருக்கின்றனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.