முதல் டி20-இல் மழை விளையாடியது
இந்தியா - நியூஸிலாந்து அணிகள் வெள்ளிக்கிழமை மோதவிருந்த முதல் டி20 ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
இந்தியா - நியூஸிலாந்து அணிகள் வெள்ளிக்கிழமை மோதவிருந்த முதல் டி20 ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
டாஸ் கூட வீச நேரம் கிடைக்காத நிலையில் ஒரு கட்டத்தில் லேசாக மழை நின்றது. ஆனால், மைதானத்தில் தேங்கியிருக்கும் நீா் வடிவதற்குள்ளாகவே மீண்டும் தொடங்கிய மழை இடைவிடாமல் பெய்தது. உள்ளூா் நேரப்படி இரவு 9.46-க்கு மழை நின்றிருந்தால் இன்னிங்ஸுக்கு 5 ஓவா்கள் விளையாடப்படலாம் என்ற நிலையில், 8.52 மணிக்கே ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இரு அணிகளும் மோதும் 2-ஆவது டி20 மௌன்ட் மௌன்கனுயியில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.