FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஆசியக் கோப்பை இந்திய அணி அறிவிப்பு: திலக் வர்மாவுக்கு வாய்ப்பு

ஆசியக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

Updated On : 21 ஆகஸ்ட் 2023, 1:51 pm IST
ரோஹித் சர்மா - டிராவிட்
பகிர்:

ஆசியக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

6 அணிகள் களம் காணும் ஆசியக் கோப்பை ஒரு நாள் போட்டி, ஆகஸ்ட் 30-இல் தொடங்கி செப்டம்பா் 17-இல் நிறைவடைகிறது.

தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்வுக் குழு கூட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, ரோஹித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மா(கேப்டன்), ஹர்திக் பாண்டியா(துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், சுப்மான் கில், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, திலக் வர்மா, இஷான் கிஷன், குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர், அக்‌ஷர் படேல், பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

சஞ்சு சாம்சன் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments