முகப்பு
செய்திகள்

கடைசி ஓவரில் 5 பந்துகளில் 21 ரன்கள்: ஹாரி புரூக் அசத்தல்! (விடியோ)

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. 

Updated On : 17 டிசம்பர் 2023, 12:14 pm IST
பகிர்:

இங்கிலாந்து அணி  மேற்கிந்திய தீவுகள் அணி நாட்டுக்கு சுற்றுப் பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் விளையாட சென்றுள்ளன. இதில் ஒருநாள் தொடரில் 2-1 என வென்று அசத்தியது மேற்கிந்திய தீவுகள்.

தங்களது சொந்த மண்ணில் 25 வருடங்களுக்குப் பிறகு இருதரப்பு ஒருநாள் தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளனர் மே.இ.தீ. அணியினர். 

அடுத்து டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் மே.இ.தீவுகள் அணி வெற்றி பெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற 3வது போட்டியில் இங்கிலாந்து தெரில் வெற்றி பெற்றது. 

Advertisement

Advertisement

முதலில் பேட்டிங் செய்த மே.இ.தீவுகள் அணி 8 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது. நிகோலஸ் பூரண் அதிரடியால் 45 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து அணியை நிலைநிறுத்தினார். 20 ஓவர் முடிவில் 222/6 ரன்கள் குவித்தது. 

அடுத்து விளையாடிய இங்கிலாந்தின் தொடக்க வீரர்கள் 115 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஜாஸ் பட்லர் 51 ரன்களுக்கு ஆட்டமிழக்க பிலிப் சால்ட் அதிரடி சதமடித்தார். லிவிங்ஸ்டன் 18 பந்துகளில் 30 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 

கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவையானபோது ஹாரி புரூக் ரஸ்ஸல் ஓவரில் விளையாடினார். 4,6,6,2,6 என 5 பந்துகளிலேயே ஆடட்த்தினை முடித்துவிடுவார். 

இந்த வெற்றியின் மூலம் 2-1 என தொடரில் மீண்டும் வந்துள்ளது இங்கிலாந்து அணி. மீதமிருக்கும் 2 போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் மட்டுமே தொடரினை வெல்ல முடியும். 

56 பந்துகளில் 109 ரன்கள் எடுத்த பிலிப் சால்ட் ஆட்ட நாயகன் விருது பெற்றார். சிலர் ஹாரி புரூக்கிற்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்திருக்கலாம் எனவும் பாராட்டி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments