FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இரு புதிய கேப்டன்கள்!

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வெள்ளைப் பந்து கேப்டன்களாக ஷாய் ஹோப்பும் ரோவ்மேன் பவலும் தேர்வாகியுள்ளார்கள்.

Updated On : 16 பிப்ரவரி 2023, 11:23 am IST
ஷாய் ஹோப்
பகிர்:

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வெள்ளைப் பந்து கேப்டன்களாக ஷாய் ஹோப்பும் ரோவ்மேன் பவலும் தேர்வாகியுள்ளார்கள்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியில் முதல் சுற்றில் மோசமாக விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, சூப்பர் 12 தகுதி பெறாமல் வெளியேறியது. இதையடுத்து தலைமைப் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் தனது பதவியை ராஜிநாமா செய்தார். பிறகு, கேப்டன் பதவியை ராஜிநாமா செய்வதாக நிகோலஸ் பூரன் அறிவித்தார். பூரன் தலைமை தாங்கிய 15 ஒருநாள் ஆட்டங்களில் 4 வெற்றிகளையும் 15 டி20 ஆட்டங்களில் 4 வெற்றிகளையும் அடைந்தது மே.இ. தீவுகள் அணி. டி20 உலகக் கோப்பையில் ஸ்காட்லாந்து, அயர்லாந்து அணிகளிடம் மே.இ. தீவுகள் அணி தோற்றது. ஒரு பேட்டராகவும் பூரனின் பங்களிப்பு மோசமாகவே இருந்தது.

அதற்குப் பிறகு அடுத்த மார்ச் மாதத்தில் தான் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விளையாடவுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது. இதையடுத்து மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வெள்ளைப் பந்து கேப்டன்களாக ஷாய் ஹோப்பும் ரோவ்மேன் பவலும் தேர்வாகியுள்ளார்கள். ஒருநாள் அணிக்கு ஷாய் ஹோப்பும் டி20க்கு ரோவ்மேன் பவலும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். 

Advertisement

Advertisement

ரோவ்மேன் பவல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments