FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இந்தியா தொடர்: பிரபல நியூசி. வீரர் விலகல்!

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்களிலிருந்து நியூசிலாந்தின் பிரபல வேகப்பந்து வீச்சாளர்...

Updated On : 7 ஜனவரி 2023, 5:49 pm IST
பகிர்:

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்களிலிருந்து நியூசிலாந்தின் பிரபல வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி விலகியுள்ளார்.

சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடும் இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் ஜனவரி 18 அன்றும் டி20 தொடர் ஜனவரி 27 அன்றும் தொடங்குகின்றன.

இந்தியா, பாகிஸ்தானில் ஒருநாள் தொடர்களில் விளையாடும் நியூசிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் இடம்பெற்றிருந்த பிரபல வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்ன் முதலில் விலகினார். தற்போது பிரபல வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றியும் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2-வது டெஸ்டின் கடைசி நாளில் ஹென்றியின் வயிற்றுப்பகுதியில் காயம் ஏற்பட்டதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆடம் மில்ன் விலகியபோது அவருக்குப் பதிலாக பிளைர் டிக்னர் தேர்வானார். தற்போது ஹென்றிக்குப் பதிலாக விளையாடவுள்ள வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

பாகிஸ்தானில் விளையாடவுள்ள ஒருநாள் தொடருக்கு நியூசிலாந்தின் கேப்டனாக கேன் வில்லியம்சனும் இந்தியாவில் டாம் லேதமும் கேப்டன்களாகச் செயல்படவுள்ளார்கள். 

இந்திய ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி

டாம் லதம் (கேப்டன்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சேப்மன், கான்வே, ஜகோப் டுஃபி, லாகி ஃபெர்குசன், பிளைர் டிக்னர், டேரில் மிட்செல், ஹென்றி நிகோல்ஸ், கிளென் பிளிப்ஸ், மிட்செல் சான்ட்னர், ஹென்றி ஷிப்லி, இஷ் சோதி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments