டெஸ்டில் 1000 பவுண்டரிகள் அடித்து ஸ்மித் சாதனை!
பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் போட்டிகளில் 1000 பவுண்டரிகள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
96 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் 9085 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 32 சதங்கள், 37 அரைசதங்கள் அடங்கும். ஐசிசி சிறந்த பேட்டர் வரிசையில் 6வது இடத்தில் உள்ளார். ஆஷஸ் தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். டான் பிராட்மேனுடன் ஒப்பிடும் அளவுக்கு திறமையான பேட்டர்.
இதையும் படிக்க: சூப்பர் சிக்ஸஸ்: முக்கியமான போட்டியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் மே.இ. தீவுகள் அணி!
தற்போது 2வது ஆஷஸ் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 221 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 3வது நாள் முடிவில் ஆஸி. 130/2 ரன்கள் எடுத்தது. மழை காரணமாக போட்டி விளையாடாமல் நின்றது.
Advertisement
Advertisement
999 பவுண்டரிகளுடன் இருந்த ஸ்மித் பிரபல் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் விசிய பந்தில் 1000ஆவது பவுண்டரியை அடித்து அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் 50 சிக்ஸர்களையும் அடித்துள்ளார்.
இதையும் படிக்க: நான் 80 வயது வரை உயிரோடு இருந்தால் அதிசயம்; 7 வருடமாக நோய் பாதிப்புள்ளது: ஆலன் பார்டர் உருக்கம்!
டெஸ்ட் போட்டிகளில் அதிக பவுண்டரிகள் எடுத்த பட்டியலில் இந்திய வீரர் சச்சின் (2058 ) முதலிடத்தில் உள்ளார்.
3வது நாள் முடிவில் ஸ்மித் 6 ரன்களுடனும் கவாஜா 58 ரன்களுடனும் களத்தில் உள்ளார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.