முகப்பு
செய்திகள்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஆகஸ்ட் 4) அறிவித்துள்ளது.

Updated On : 4 ஆகஸ்ட் 2024, 8:15 pm IST
- படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
பகிர்:

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஆகஸ்ட் 4) அறிவித்துள்ளது.

இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் வருகிற ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஆகஸ்ட் 4) அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஸாக் கிராலி கை விரல் முறிவு காரணமாக இலங்கைக்கு எதிரான இந்த தொடரில் இடம்பெறவில்லை. அணியில் அறிமுக வீரராக ஜோர்டான் காக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆலி ஸ்டோன் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி விவரம்

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), கஸ் அட்கின்சன், சோயப் பஷீர், ஹாரி ப்ரூக், ஜோர்டான் காக்ஸ், பென் டக்கெட், டான் லாரன்ஸ், ஆலி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஆலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ் மற்றும் மார்க் வுட்.

டெஸ்ட் தொடர் விவரம்

முதல் டெஸ்ட் - மான்செஸ்டர் (ஆகஸ்ட் 21 - ஆகஸ்ட் 25)

2-வது டெஸ்ட் - லண்டன் (ஆகஸ்ட் 29 - செப்டம்பர் 2)

3-வது டெஸ்ட் - லண்டன் (செப்டம்பர் 6 - செப்டம்பர் 10)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments