முகப்பு
செய்திகள்

உலக செஸ் சாம்பியன்ஷிப்: மீண்டும் சமனில் முடிந்தது 9-வது சுற்று..!

உலக செஸ் சாம்பியன்ஷிப் 9-வது சுற்றும் டிராவில் முடிந்தது.

Updated On : 5 டிசம்பர், 2024 at 1:43 PM
குகேஷ் - லிரேன்
பகிர்:

உலக செஸ் சாம்பியன்ஷிப் 9-வது சுற்றும் டிராவில் முடிந்தது.

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனும், இந்திய வீரர் குகேஷும் விளையாடி வருகின்றனர்.

செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வென்ற குகேஷ், நடப்பு சாம்பியன் டிங் லிரெனுடம் மோதும் வாய்ப்பு கிடைத்தது. இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற சாதனையை குகேஷ் படைத்தார்.

அடிலெய்டில் விராட் கோலியின் ஆதிக்கம் தொடருமா?

14 சுற்றுகளைக் கொண்ட இந்தத் தொடரில் முதலில் 7.5 புள்ளிகள் பெறும் நபர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இந்தத் தொடரின் முதல் சுற்றில் டிங் லிரேனும் மூன்றாவது சுற்றில் குகேஷும் வெற்றி பெற்றனர். இரண்டாவது சுற்று டிராவில் முடிந்தது. மேலும் 4,5,6,7, 8-வது சுற்றுகளும் தொடர்ந்து டிராவிலேயே முடிந்தன.

இந்த நிலையில் நடைபெற்ற 9-வது சுற்றில் குகேஷ் வெள்ளை நிற காய்களுடனும் லிரென் கறுப்பு நிற காய்களுடனும் விளையாடினார்கள். இருவருமே வெற்றி பெறும் வாய்ப்பினை தவறவிட்டு, இறுதியில் 54-வது நகர்த்தலில் இருவரும் டிராவில் முடித்துக்கொண்டார்கள்.

ஜெய்ஸ்வால் வம்பிழுத்தது குறித்து மனம்திறந்த மிட்செல் ஸ்டார்க்!

நாளை ஓய்வு நாளாகும். இவர்கள் இருவரும் மோதும் 10-வது சுற்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இன்னும் 5 போட்டிகள் மீதமுள்ளன. இந்தத் தொடரில் வெற்றிபெறுபவருக்கு 2.25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பழைய விஷயங்களை மறக்காதவர்..! ஜெய்ஸ்வாலின் பால்யகால நண்பர்
முழு கட்டுரையைப் படிக்க →