FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

உலகக் கோப்பையுடன் மோடியை சந்தித்த இந்திய வீரர்கள்!

பார்படாஸில் இருந்து தில்லிக்கு இன்று காலை இந்திய வீரர்கள் வந்தடைந்தனர்.

Updated On : 4 ஜூலை 2024, 1:20 pm IST
உலகக் கோப்பையுடன் மோடியை சந்தித்த இந்திய வீரர்கள்
பகிர்:

உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கடந்த சனிக்கிழமை பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதால் நாடே கொண்டாட்டத்தில் ஆழ்ந்த நிலையில், அட்லாண்டிக் பெருங்கடலில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக இந்திய வீரர்கள் உடனடியாக தாயகம் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

இந்நிலையில், வானிலை சீரானதை தொடர்ந்து புதன்கிழமை பிற்பகல்(இந்திய நேரம்) 2 மணியளவில் பார்படாஸில் இருந்து தனி விமானம் மூலம் வீரர்கள் புறப்பட்டு இன்று காலை 6 மணியளவில் தில்லி வந்தடைந்தனர்.

தில்லி விமான நிலையத்தில் குவிந்த ரசிகர்கள் இந்திய வீரர்களுக்கு வரவேற்பளித்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை இந்திய வீரர்கள், பயிற்சியாளர்கள் நேரில் சந்தித்தனர்.

உலகக் கோப்பையை பிரதமரிடம் கொடுத்து வீரர்கள் வாழ்த்துப் பெற்றனர். தொடர்ந்து, மோடி அளித்த விருந்தில் வீரர்கள் பங்கேற்றனர்.

இதையடுத்து மும்பை செல்லும் இந்திய வீரர்கள் திறந்தவெளி வாகனத்தில் ரசிகர்களுக்கு மத்தியில் பேரணியாக செல்லவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments