முகப்பு
செய்திகள்

இந்தியாவுக்கு 178 ரன்கள் இலக்கு; தொடர் இழப்பை தவிர்க்குமா?

இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க மகளிரணி 6 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 7 ஜூலை 2024, 9:07 pm IST
- படம் | பிடிஐ
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க மகளிரணி 6 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (ஜூலை 7) நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தென்னாப்பிரிக்க அணி முதலில் விளையாடியது.

தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக தஸ்மின் பிரிட்ஸ் அரைசதம் எடுத்து அசத்தினார். அவர் 39 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அன்னெக் போஸ்ச் அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார்.

Advertisement

Advertisement

இந்தியா தரப்பில் தீப்தி சர்மா மற்றும் பூஜா வஸ்த்ரகார் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். ஸ்ரேயங்கா பாட்டீல் மற்றும் ராதா யாதவ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்குகிறது.

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே தென்னாப்பிரிக்க அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றதால், இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்போடு அந்த அணி களம் காண்கிறது. டி20 தொடரை இழக்காமலிருக்க வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி களம் காண்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.