FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தான் செல்ல இந்திய அணி மறுப்பு!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்தாண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானில் நடைபெறுகிறது.

11 ஜூலை 2024, 11:22 am IST
கோப்புப்படம்
பகிர்:

அடுத்தாண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட அந்நாட்டுக்கு செல்ல இந்திய அணி மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்தியா விளையாடவுள்ள போட்டிகளை இலங்கை அல்லது துபையில் நடத்த சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்தாண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டிகளை பாகிஸ்தான் நடத்திய நிலையில், அந்நாட்டுக்கு செல்ல இந்தியா மறுத்ததால், இந்திய அணி விளையாடிய போட்டிகள் மட்டும் இலங்கையில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

மினி உலகக் கோப்பை எனப்படும் சாம்பியஸ் டிராபி 2025 தொடரை நடத்துவதற்கான உரிமத்தை பாகிஸ்தான் பெற்றுள்ளது. அடுத்தாண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள இந்த தொடருக்கான மாதிரி அட்டவணையை ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சமர்பித்திருந்தது.

அதில், இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி மார்ச் 1ஆம் தேதி லாகூரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணியில் போட்டிகளை இலங்கையில் நடத்தியது போலவே, சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் நடத்த வேண்டும் என்று பிசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், இதுகுறித்து இம்மாத கடைசியில் கொழும்புவில் நடைபெறவுள்ள ஐசிசி கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

சர்வதேச தொடர்களை தவிர, இந்தியாவும் பாகிஸ்தானும் 2012-க்கு பிறகு இருதரப்பு போட்டிகளில் விளையாடவில்லை. 2008-ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு இந்திய அணி பயணம் மேற்கொள்ளவில்லை.

எல்லைப் பிரச்னைகள் முடியும் வரை பாகிஸ்தானுடன் இந்திய அணி இருதரப்பு போட்டிகளில் விளையாடாது என்று கடந்தாண்டு மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்திருந்தார்.

கடந்த 2017 சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி கோப்பை வென்று நடப்பு சாம்பியனாக உள்ளது. ஆனால், கடந்தாண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை, இந்தாண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments