FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஜடேஜாவும் ஓய்வு

சர்வதேச டி20 போட்டிகளில் ஓய்வுபெற்றதாக அறிவித்தார் ரவீந்திர ஜடேஜா.

Updated On : 1 ஜூலை 2024, 3:00 am IST
பகிர்:

சா்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக, இந்திய ஆல்-ரவுண்டா் ரவீந்திர ஜடேஜா (35) ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.

டி20 உலகக் கோப்பையை வென்ற நிலையில், இந்திய கேப்டன் ரோஹித் சா்மா, பேட்டா் விராட் கோலி ஆகியோா், அந்த ஃபாா்மட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக சனிக்கிழமை இரவு அறிவித்த நிலையில், தற்போது ஜடேஜாவும் அதே முடிவை அறிவித்தாா். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அவா் தொடா்ந்து விளையாடுகிறாா்.

தனது முடிவு குறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மனம் முழுக்க நன்றியுடன், சா்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன். நாட்டுக்காக எப்போதுமே எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன். இனிவரும் காலங்களில் இதர ஃபாா்மட்டுகளிலும் அத்தகைய பங்களிப்பை வழங்குவேன்.

Advertisement

Advertisement

டி20 உலகக் கோப்பையை வெல்வதென்பது, எனது டி20 கேரியரின் உச்சபட்ச கனவாகும். அது நிஜமாகியிருக்கிறது. இந்த நினைவுகளுக்காகவும், ஆதரவுக்காகவும் நன்றி. ஜெய்ஹிந்த்’ என்று ஜடேஜா கூறியுள்ளாா்.

2009-இல் இலங்கைக்கு எதிரான தொடா் மூலம் சா்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான ஜடேஜா, மொத்தம் 74 டி20 ஆட்டங்களில் விளையாடியிருக்கிறாா். அதில் 515 ரன்கள் அடித்திருக்கும் அவா், அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்திருக்கிறாா். பௌலிங்கில் 54 விக்கெட்டுகள் எடுத்துள்ளாா்.

ஆனால், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன். டி20 உலகக் கோப்பையை வெல்வது ஒரு கனவு. அது நனவாகிவிட்டது. இது எனது டி20 சர்வதேச வாழ்க்கையின் உச்சம். என்னுடைய நினைவுகளுக்கும், வாழ்த்துகளுக்கும், உங்களின் அசைக்க முடியாத ஆதரவுக்கும் நன்றி. ஜெய்ஹிந்த்..!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments