முகப்பு
செய்திகள்

2-வது டெஸ்ட்: ஆஸி.க்கு 279 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து 372 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Updated On : 10 மார்ச் 2024, 4:25 pm IST
பகிர்:

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் (மார்ச் 8) கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்கியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் விளையாடியது. நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டாம் லாதம் 38 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஜோஸ் ஹேசில்வுட் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ் மற்றும் கேமரூன் கிரீன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலியா 256 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மார்னஸ் லபுஷேன் 90 ரன்கள் எடுத்தார். அதில் 12 பவுண்டரிகள் அடங்கும். நியூசிலாந்து தரப்பில் மாட் ஹென்றி 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கேப்டன் டிம் சௌதி, பென் சியர்ஸ் மற்றும் கிளன் பிளிப்ஸ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

Advertisement

Advertisement

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்திருந்தது. 100-வது போட்டியில் விளையாடும் கேன் வில்லியம்சன் அரைசதம் எடுத்தார். அவர் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். டாம் லாதம் 65 ரன்களுடனும், ரச்சின் ரவீந்திரா 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 40 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில், இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. டாம் லாதம் 73 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் ரச்சின் ரவீந்திராவுடன் டேரில் மிட்செல் இணைந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தனர். ரச்சின் ரவீந்திரா 82 ரன்களிலும், டேரில் மிட்செல் 58 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் 372 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் பாட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நேதன் லயன் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசில்வுட் மற்றும் கேமரூன் கிரீன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் எடுத்துள்ளது. டிராவிஸ் ஹெட்17 ரன்களுடனும், மிட்செல் மார்ஷ் 27 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற இன்னும் 202 ரன்கள் தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.