100வது சர்வதேச டி20யில் வார்னர் புதிய சாதனை!
பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் புதிய சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான டி20 தொடர் இன்று தொடங்கியது. இன்று நடைபெற்று வரும் முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் குவித்துள்ளது. டேவிட் வார்னர் 36 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து அசத்தினார். 3 சர்வதேசப் போட்டிகளிலும் தனது 100வது போட்டியில் அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை படைத்துள்ளார்.
இதையும் படிக்க: பேஸ்பால் ஆட்டத்தை ஜோ ரூட் கைவிட வேண்டும்: முன்னாள் கேப்டன் விமர்சனம்!
Advertisement
Advertisement
சர்வதேச டி20-யில் 3,000 ரன்கள் எடுத்த 2வது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் டேவிட் வார்னர். 25 அரை சதங்கள், 1 சதம் அடித்துள்ளார். இதற்கு முன்பாக பின்ச் 3120 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டேவிட் வார்னர் 100வது சர்வதேச போட்டிகளில் அடித்த ரன்கள்:
100வது டெஸ்டில் 200 ரன்கள்
100வது ஒருநாள் போட்டியில் 124 ரன்கள்
100வது டி20 போட்டியில் 70 ரன்கள்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.