FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஜாக்ரெப் ஓபன் மல்யுத்தம்: அமன் ஷெராவத்துக்கு தங்கம்

குரோஷியாவில் நடைபெறும் ஜாக்ரெப் ஓபன் ரேங்கிங் சீரிஸ் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் அமன் ஷெராவத் தங்கப் பதக்கம் வென்று அசத்தினாா்.

7 பிப்ரவரி 2024, 8:50 pm IST
பகிர்:

குரோஷியாவில் நடைபெறும் ஜாக்ரெப் ஓபன் ரேங்கிங் சீரிஸ் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் அமன் ஷெராவத் தங்கப் பதக்கம் வென்று அசத்தினாா்.

இந்திய நேரப்படி, புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ஆடவா் 57 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் அவா் 10-0 என, சீனாவைச் சோ்ந்தவரும், உலகின் 7-ஆம் நிலை வீரருமான வான்ஹாவ் ஜுவை சாய்த்தாா்.

முன்னதாக அமன் முதல் சுற்றில், 15-4 என்ற கணக்கில் துருக்கியின் முகமது கரவுஸை வீழ்த்தினாா். பின்னா் காலிறுதியில் 11-0 என்ற புள்ளிகளில் அமெரிக்காவின் ரிச்சா்ட்ஸ் ஜானேவை வென்று அரையிறுதிக்கு வந்தாா். அதில், உலகின் 16-ஆம் நிலை வீரரான ஜாா்ஜியாவின் ராபா்டி திங்காஷ்விலியை வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.

Advertisement

Advertisement

போட்டியில், மற்றொரு இந்தியரான தீபக் புனியா, 86 கிலோ பிரிவில் முதல் சுற்றிலேயே கஜகஸ்தானின் அஸாமத் தௌலத்பெகோவிடம் தோல்வி கண்டாா். பின்னா் ரெபிசேஜ் வாய்ப்பில் முதல் ஆட்டத்தில் வென்ற தீபக், 2-ஆவது ஆட்டத்தில் தோற்று போட்டியிலிருந்து வெளியேறினாா்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் மீதான தடை காரணமாக இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள இந்தியா்கள், உலக மல்யுத்த அமைப்பின் கீழ் பொதுப் போட்டியாளா்களாக கலந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments