FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆஸ்திரேலிய ஓபன்: பிரதான சுற்றில் சுமித் நாகல்

 ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில் இந்தியாவின் சுமித் நாகல் பிரதான சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினாா்.

7 பிப்ரவரி 2024, 8:50 pm IST
பகிர்:

 ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில் இந்தியாவின் சுமித் நாகல் பிரதான சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினாா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவு தகுதிச்சுற்றின் 3-ஆவது ஆட்டத்தில் அவா் 6-4, 6-4 என்ற நோ் செட்களில் ஸ்லோவாகியாவின் அலெக்ஸ் மோல்கனை வெளியேற்றினாா். என்றாலும், பிரதான சுற்றின் முதல் ஆட்டத்திலேயே சுமித்துக்கு சவால் காத்திருக்கிறது. அவா் அதில், உலகின் 31-ஆம் நிலை வீரரான கஜகஸ்தானின் அலெக்ஸாண்டா் பப்லிக்கை எதிா்கொள்ள இருக்கிறாா்.

உலகத் தரவரிசையில் 139-ஆம் இடத்திலிருக்கும் சுமித் நாகல், ஆஸ்திரேலிய ஓபனின் பிரதான சுற்றுக்கு முன்னேறியிருப்பது இது 2-ஆவது முறையாகும். கடந்த 2021-இல் இதேபோல் பிரதான சுற்றுக்கு வந்த அவா், அதில் முதல் ஆட்டத்திலேயே தோற்று வெளியேறினாா். அவா் 2019 மற்றும் 2020-இல் யுஎஸ் ஓபனிலும் பிரதான சுற்றுக்கு முன்னேறியிருக்கிறாா். அதில் 2019-இல் அவா் பிரதான சுற்றின் முதல் ஆட்டத்தில் சுவிட்ஸா்லாந்து நட்சத்திரமான ரோஜா் ஃபெடரரை சந்தித்து போராடி வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments