மும்பையில் ‘ஒரிஜினல் மான்ஸ்டர்’ படத் தலைப்பு, மோஷன் போஸ்டர் வெளியீடு
‘ஒரிஜினல் மான்ஸ்டர்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழா பற்றி...
மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வரும் ‘ஒரிஜினல் மான்ஸ்டர்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழா மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இயக்குநர் ஆர். சந்துரு, தயாரிப்பாளர் ஆனந்த் பண்டிட், பான்-இந்தியா சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ்குமார், கீதா சிவராஜ்குமார், நடிகர் சுனில், இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் மற்றும் ஒளிப்பதிவாளர் ஏ.ஜே. ஷெட்டி ஆகியோர் கலந்துகொண்ட இந்தச் சிறப்பு நிகழ்வில் மோஷன் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
திரைப்படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டருக்கு விழாவில் கூடியிருந்தவர்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்தது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முன்னணி திரையுலகக் பிரபலங்களின் பங்களிப்புடன் உருவாகி வரும் இத்திரைப்படம், இந்த வெளியீட்டின் மூலம் தனது பான்-இந்தியா விளம்பரப் பயணத்தை முறைப்படி தொடங்கியுள்ளது.
Advertisement
Advertisement
மும்பையில் நடைபெற்ற இந்தத் தொடக்க நிகழ்வு, இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களிடையே ‘ஒரிஜினல் மான்ஸ்டர்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.