FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட நாமக்கல் சிப்காட் திட்டம் ரத்து செய்யப்படும்: அமைச்சர்

நாமக்கல்லில் அறிவிக்கப்பட்ட சிப்காட் திட்டம் விரைவில் ரத்து செய்யப்படும் என அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கூறியது குறித்து...

முதல்வர் விஜய்யுடன் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் - கோப்புப் படம்
பகிர்:

திமுக ஆட்சியில் நாமக்கல்லில் அறிவிக்கப்பட்ட சிப்காட் திட்டம் விரைவில் ரத்து செய்யப்படும் என அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

பரமத்தில்வேலூரில் தவெக 100 நாள் சாதனை பொதுக் கூட்டத்தில் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் பேசியதாவது, "மேட்டூர் அணைக்கு ஆரம்பத்திலேயே நீர் திறப்பதாய்த்தான் இருந்தது. ஆனால், பயிர்களைத் தயார் செய்ய 7 நாள் அவகாசம் வேண்டும் என டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மீண்டும் வெற்றிலைப் பயிர்களெல்லாம் கருகி விடுமென விவசாயிகள் கேட்டனர்.

அதனை நீர்வளத் துறை அமைச்சரிடம் கூறினேன். இதுகுறித்து முதல்வரிடமும் தலைமைச் செயலாளரிடமும் ஆலோசிக்கலாம் என அவர் கூறினார். அதேபோல் சொன்னதுபோலவே மறுநாள் மாலையிலேயே தண்ணீர் திறக்கப்பட்டது. இதேபோல விவசாயிகளுக்கும் ஏராளமான திட்டங்களை முதல்வர் கொண்டு வருகிறார்.

Advertisement

Advertisement

நாமக்கல் மாவட்டத்தில் சிப்காட் வருவதாய் இருந்தது. கடந்த திமுக ஆட்சியில் அவர்கள் கட்சியினர் வாங்கிய நிலங்களின் மதிப்பு ஏற வேண்டும் என்பதற்காக அப்பகுதியில் சிப்காட் கொண்டு வருவதாய் சொன்னார்கள். ஆனால், அதனால் விவசாயிகளுக்கு பாதிக்கப்படும் திட்டமாய் இருந்தது.

இதனையடுத்து, வேறொரு இடத்தில் லத்துவாடி என்ற பகுதியில் புது சிப்காட்டை முதல்வர் அறிவித்திருக்கிறார். நாமக்கல்லில் அறிவிக்கப்பட்டுள்ள சிப்காட்டை நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். மாவட்ட நிர்வாகமும் தொழிற்துறையும் இணைந்து இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம்" என்று தெரிவித்தார்.

summary

Namakkal SIPCOT announced in DMK period to be cancelled, says Minister Lokesh Tamilselvan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments