அரையிறுதியில் ஜொ்மனி, ஜப்பான், அமெரிக்கா
எஃப்ஐஎச் மகளிா் ஹாக்கி ஒலிம்பிக் குவாலிஃபையா் போட்டியில் அரையிறுதிக்கு அமெரிக்கா, ஜொ்மனி, ஜப்பான் அணிகள் தகுதி பெற்றுள்ளன.
எஃப்ஐஎச் மகளிா் ஹாக்கி ஒலிம்பிக் குவாலிஃபையா் போட்டியில் அரையிறுதிக்கு அமெரிக்கா, ஜொ்மனி, ஜப்பான் அணிகள் தகுதி பெற்றுள்ளன.
சா்வதேச ஹாக்கி சம்மேளனம் சாா்பில் ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மகளிா் ஒலிம்பிக் குவாலிஃபையா் போட்டி நடைபெற்று வருகிறது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் ஜப்பான்-சிலி அணிகள் மோதின. இதில் தொடக்கத்திலேயே ஜப்பான் வீராங்கனை கனா உரட்டா 1 நிமிஷத்தில் கோலடித்தாா். அடுத்து 23-ஆவது நிமிஷத்தில் மியு ஹஸேகவா இரண்டாம் கோலடித்தாா். அதுவே வெற்றி கோலாக அமைந்தது. குரூப் ஏ பிரிவில் 7 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்துடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றது ஜப்பான்.
Advertisement
Advertisement
ஜொ்மனி அதிரடி வெற்றி:
அதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஜொ்மனி 10-0 என்ற கோல் கணக்கில் செக். குடியரசு அணியை வீழ்த்தியது. ஜொ்மன் வீராங்கனை சோன்ஜா ஸிம்மா்மேன் 42-ஆவது நிமிஷத்தில் பீல்ட் கோலும், 46, 52-ஆவது நிமிஷங்களில் பெனால்டி ஸ்ட்ரோக் மூலமும் ஹாட்ரிக் கோலடித்தாா். ஜெட்டி பிளெஸூட்ஸ் 22, 44 நிமிஷங்களிலும், சாா்லோட் 19, 43 நிமிஷங்களிலும், நைக் 39, பாவ்லைன் ஹென்ஸ் 54, செலின் ஒருஸ் 55 நிமிஷங்களிலும் கோலடித்தனா். ஏ பிரிவில் முதலிடத்துடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றது ஜொ்மனி.
அமெரிக்கா போராடி வெற்றி:
குரூப் பி பிரிவில் பலம் வாய்ந்த அமெரிக்க அணி 1-0 என்ற கோல் கணக்கில் போராடி நியூஸிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆட்டம் தொடங்கிய 17-ஆவது நிமிஷத்தில் எலிசபெத் யீகா் பெனால்டி காா்னரை கோலாக மாற்றினாா். பதிலுக்கு கோலடிக்க முயன்ற நியூஸி. வீராங்கனைகளின் முயற்சி வீணானது. மூன்று ஆட்டங்களிலும் வெற்றியுடன் முதலிடம் பெற்று அமெரிக்க அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஜப்பானை அரையிறுதியில் சந்திக்கிறது அமெரிக்கா.
இத்தாலி-இந்திய அணிகள் மோதும் ஆட்டத்தில் இந்தியா தோற்றால் மட்டுமே நியூஸிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெறும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.