முகப்பு
செய்திகள்

ஒரு தொடரில் ஒரே அணிக்காக 500-ஆவது போட்டியில் களமிறங்கிய தாமஸ் முல்லர்!

தாமஸ் முல்லர் ஜெர்மனி கால்பந்து தொடரில் ஒரே அணிக்காக தனது 500-ஆவது போட்டியில் களமிறங்கினார்.

Updated On : 27 ஏப்ரல், 2025 at 1:26 PM
தாமஸ் முல்லர் - படம்: எக்ஸ் / பெயர்ன் மியூனிக்.
பகிர்:
Updated On : 27 ஏப்ரல், 2025 at 12:42 PM

ஜெர்மனி ஜெயண்ட்ஸ் எனப்படும் பெயர்ன் மியூனிக் அணிக்காக 35 வயதாகும் தாமஸ் முல்லர் புன்டஸ்லீகா தொடரில் 500 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

தாமஸ் முல்லர் ஆக.15, 2008ஆம் ஆண்டு பெயர் மியூனிக் அணிக்காக அறிமுகமாகி 25 ஆண்டுகளாக விளையாடிவரும் இவர் இந்த சீசனோடு அணியை விட்டுப் பிரிகிறார்.

அறிமுகமானதிலிருந்து 6,101 நாள்களுக்குப் பிறகு புன்டஸ்லீகா தொடரில் ஒரே அணிக்காக 500-ஆவது முறையாக விளையாடி சாதனை படைத்துள்ளார்.

Advertisement

ஏற்கனவே, பெயர் மியூனிக் அணிக்காக ஒருவர் அதிகமான போட்டிகளில் (748) விளையாடியதில் இவர்தான் முதலிடத்தில் இருக்கிறார்.

Updated On : 27 ஏப்ரல், 2025 at 12:43 PM

கடந்த 2,000ஆம் ஆண்டில் இந்த அணியில் சேர்ந்த தாமஸ் முல்லர் அட்டாகிங் மிட்ஃபீல்டர், செகண்ட் ஸ்டிரைக்கராக விளையாடி வந்தார்.

இவரது பங்களிப்பில் 12 முறை புன்டெஸ்லீகா தொடரினையும் 2 முறை சாம்பியன்ஸ் லீக்கையும் 6 டிஎஃப்எக்ஸ் பட்டங்களையும் வென்றுள்ளார்.

தொடர்ச்சியாக 11 முறை புன்டெஸ்லீகா தொடரினை வென்றதில் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தத் தொடரில் தனது 500-ஆவது போட்டியில் பங்கேற்றதுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்தப் போட்டியில் பெயர் மியூனிக் 3-0 அபார வெற்றிப் பெற்றது. 75 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் பெயர்ன் மியூனிக் இந்தாண்டும் கோப்பையை கைப்பற்றுவதில் உறுதியாக இருக்கிறது.

Updated On : 27 ஏப்ரல், 2025 at 1:09 PM

இந்த அணியுடன் ஜூன் 30 உடன் தாமஸ் முல்லரின் ஒப்பந்தம் முடிவடைகிறது. கடைசியாக புன்டஸ்லீகா கோப்பையுடன் வெளியேறவிருக்கிறார்.

புன்டஸ்லீகா தொடரில் ஒரே அணிக்காக அதிகமுறை விளையாடியவர்கள்

1. கார்ல்-ஹெய்ன்ஸ் கோர்பெல் - 602 போட்டிகள் (ஐன்ட்ராக்ட் பிராங்பேர்ட் அணி)

2. மான்ஃப்ரெட் கால்ட்ஸ் - 581 போட்டிகள் (ஹம்பர்க் எஸ்வி)

3. மைக்கேல் லாமெக் - 518 போட்டிகள் (போச்சம் அணி)

4. தாமஸ் முல்லர் - 500 (பெயர்ன் மியூனிக் அணி)

5. கிளாஸ் ஃபிட்செல் - 477 (ஷால்கே 04 அணி)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.