FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய இணை ட்ரீசா/காயத்ரி!

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் பதக்கத்தை உறுதிசெய்த இந்திய மகளிர் இணை ட்ரீசா/காயத்ரி குறித்து...

44 வினாடிகள் முன்பு
வெற்றிக் களிப்பில் ட்ரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் - படம்: எக்ஸ் / பிஏஐ மீடியா.
பகிர்:

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் காலிறுதியில் வென்ற இந்திய மகளிர் இணை ட்ரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதிசெய்துள்ளார்கள்.

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆக.17 முதல் 23ஆம் தேதி வரை புதுதில்லியில் நடைபெற இருக்கின்றன. கடந்த 2009 ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக இந்தியா தனது சொந்த மண்ணில் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்துகிறது.

மகளிர் இரட்டையர் பிரிவில் சீன வீராங்கனைகள் ஜியா யிஃபான் மற்றும் ஜாங் ஷு சியான் உடன் இந்திய வீராங்கனைகள் ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் காலிறுதியில் மோதினார்கள்.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் சீன வீராங்கனைகள் முதல் கேமில் 21-16 என வென்றார்கள். அடுத்த இரண்டு கேம்களில் இந்திய வீராங்கனைகள் 21-15, 21-13 என கம்பேக் அளித்து வென்றார்கள். இந்தப் போட்டி ஒரு மணி நேரம் 9 நிமிஷங்கள் நடைபெற்றன.

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் கடைசியாக 2011ஆம் ஆண்டு இந்திய மகளிர் ஜுவாலா கட்டா மற்றும் அஸ்வினி பொன்னாப்பா இணைந்து வென்றிருந்தார்கள். இந்த வரிசையில் மீண்டும் பதக்கம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த அர்ஜுனா விருதுகள் பட்டியலில் ட்ரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் இணையினர் தேர்வாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

summary

Treesa-Gayatri in semifinals, assured of medal at World Championships

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments