உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்: அமெரிக்க வீரரின் யுக்தியில் வீழ்ந்த லக்ஷயா சென்!
உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் இரண்டாவது சுற்று குறித்து...
உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீரர் லக்ஷயா சென் போராடி தோல்வியுற்றார்.
உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆக.17 முதல் 23ஆம் தேதி வரை புதுதில்லியில் நடைபெற இருக்கின்றன. கடந்த 2009 ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக இந்தியா உலக சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்துகிறது.
முதல் சுற்றில் உலகின் நம்.1 வீரரை லக்ஷயா சென் (25 வயது) வீழ்த்தி அசத்தினார். இரண்டாவது சுற்றில் அமெரிக்க வீரர் கேரட் டான் (18 வயது) உடன் மோதினார்.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் முதல் கேமில் லக்ஷயா சென் 21-19 என வென்றார். இரண்டாவது கேமில் 19-21 எனத் தோல்வியுற்றார். கடைசி கேமில் குறைவான புள்ளிகளில் இருந்து மீண்டு வந்து, பின்னர் இறுதியில் 17-21 எனத் தோல்வியுற்றார்.
முதல் கேம் 21 நிமிஷங்கள், இரண்டாவது கேம் 23 நிமிஷங்கள் கடைசி கேம் 29 நிமிஷங்கள் விளையாடப்பட்டன. கடைசி கேமில் அமெரிக்க வீரரின் இடைவெளி யுக்தி அவருக்கு பலன் அளித்தது.
அடுத்ததாக, மூன்றாவது சுற்றான ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறாமல் தொடரிலிருந்து லக்ஷயா சென் வெளியேறினார். மகளிர் பிரிவில் உனாட்டி ஹூடா கனடாவின் அனுபவமிக்க வீராங்கனையிடம் தோல்வியுற்றார்.
இறுதிப் போட்டி ஆக.23ஆம் தேதி நடைபெற இருக்கிறது. முதல் சுற்றில் லக்ஷயா சென் அளித்த நம்பிக்கை அவர் கோப்பை வெல்வாரென பலரும் நம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
World Badminton Championships: Lakshya Sen suffers a hard-fought defeat in the second round!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.